2025 மே 05, திங்கட்கிழமை

‘மாதாந்தக் கூட்டங்களை நடத்துவது ஆபத்தானது’

Gavitha   / 2020 நவம்பர் 12 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்த

கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, அவரசக் காரணங்களுக்காகக் கூட, உள்ளூராட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் பங்கேட்புடன், மாதாந்தக் கூட்டங்களை நடத்துவது ஆபத்தானது என, சப்ரகமுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கண்ணங்கர, இன்று (12) தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சுகாதாரச் சட்டங்களை மீறி, உள்ளூராட்சி மன்றக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான அவர் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில், 29 உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளன என்றும் இதில் ஒரு மாநகரசபையும் மூன்று நகரசபைகளும் 25 பிரதேச சபைகளும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்னர், தத்தமது பிரதேசங்கிளன் பட்ஜெட்டை நிறைவேற்றவேண்டும் என்பதால், மாதாந்தக் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது என்றும் சில உள்ளூராட்சி மன்றங்கள் விதிமுறைகளை மீறி, கூட்டங்களையும் நடத்தி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு, 1 மீற்றருக்கும் அதிகமான தூரத்தைப் பராமறிப்பது அவசியம் என்றும் எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் கூட்ட மண்டபத்தில், 1 மீற்றர் தூரத்துக்குள் மொத்த உறுப்பினர்களையும் கூட்டங்களில் அமரவைக்க முடியாது என்றும் நெருக்கமான கூட்டங்க, ஆபத்தையே ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, இந்த நேரத்தில் பட்ஜெட்டை நிறைவேற்றவேண்டியது அவசியம் என்றாலும், அது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடத்தப்படுதல் வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X