R.Maheshwary / 2022 ஏப்ரல் 10 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை பிரதேசத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக, மாத்தளை- வட்டகொட பிரதான வீதியின் அமைந்துள்ள கற்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், கற்கள் சரிந்து வருவதால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இப்பகுதியில் கற்கள் சரிந்து வருவதால் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக பண்டாரவால் சம்பந்தப்பட்ட பிரிவினரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
அதற்கமைய அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம், பிரதேச செயலகம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து வீதியில் உள்ள கற்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago