2025 மே 05, திங்கட்கிழமை

மாத்தளை சிறு கடையாளர்களுக்கு சிரமம்

Gavitha   / 2020 நவம்பர் 23 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, தாங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக,  மாத்தளை மாவட்டதைச் சேர்ந்த சிறு கடை உரிமையாளர்கள் தெரிவிழத்துள்ளனர்.

மஹியங்கனை, வில்கமுவாவில் இருந்து மணல் கொண்டு வரும் லொறிகளின் சாரதி, நடத்துநர்களுக்கே, தாங்கள் சேவை வழங்கி வந்ததாகவும் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் இந்தச் சிறிய கடைகள் அனைத்தும், லொறிகள் மணல் ஏற்றுவதற்காக சென்று வராதமையால் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த லொறிகளுக்கு சேவை வழங்குவதற்கான சுமார் நூற்றுக்கணக்கான லொறிகள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் தற்போது இந்த அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளமையால், தாங்கள் பாரிய சிரமத்துக்கு முகங்கொடுத்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X