2025 மே 05, திங்கட்கிழமை

மாத்தளை மாவட்டத்தில் 11,220 பேர் வெளிநாடுகளில் வேலை

Gavitha   / 2020 நவம்பர் 16 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஷ் கீர்த்திரட்ண

மாத்தளை மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 11,220 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் மாத்தளை மாவட்ட சமூக உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் குழுக் கூட்டத்தில் தெரியந்துள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை, 6,326 ஆண்களும் 4,894 பெண்களும் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, பிரதேச செயலாளரின் மேற்பார்வையின் கீழ், ஒரு குடும்பப் பின்னணி அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும் எனினும், பதிவு செய்யப்படாத சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் ஊடாக வெளிநாடுநாடுகளுக்குச் செல்லும் சில பெண்கள், அங்கு பல துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X