Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
R.Maheshwary / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி சபைகளில் 90 பேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் இதில் 3 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் மாத்தளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தேஜானி திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மாத்தளை மாநகர சபை, தம்புளை நகர சபை மற்றும் 11 பிரதேச சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 90 வேட்பு மனுக்களில் 87 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 03 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஐனநாயக ஐக்கிய தேசிய முன்னணணி மற்றும் சுயாதீன குழுவொன்றால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேட்புமனுக்களும் கலேவெல பிரதேச சபைக்காக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவொன்றும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தம்புள்ளை மாநகர சபைக்கு 05 கட்சிகளும் 01 சுயேச்சைக் குழுவும், மாத்தளை நகர சபைக்கு 08 அரசியல் கட்சிகளும், பல்லேபொல பிரதேச சபைக்கு 06 அரசியல் கட்சிகளும், கலேவெல பிரதேச சபைக்கு 07 கட்சிகளும், தம்புள்ளை பிரதேச சபைக்கு 06 கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
அம்பங்கங்க பிரதேச சபைக்கு 07 கட்சிகள், நாவுல பிரதேச சபைக்கு 08 கட்சிகள், லக்கல பிரதேச சபைக்கு 06 கட்சிகள், ரத்தோட்டை பிரதேச சபைக்கு 08 கட்சிகள் மற்றும் 02 சுயேட்சை குழுக்கள், மாத்தளை பிரதேச சபைக்கு 08 கட்சிகள், யட்டவத்த பிரதேச சபைக்கு 06 கட்சிகள், 05 வில்கமுவ பிரதேச சபைக்காக 09 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் 01 சுயேச்சைக் குழுவும் உக்குவெல பிரதேச சபைக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago