Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
R.Maheshwary / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா மார்ச் மாதம் 06ஆம் திகதி வெகு விமரிசையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடலானது, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நாலக பண்டார கோட்டேகொட மற்றும் மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே, இது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கொவிட் தொற்றால் இதில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கையில் மட்டுபாடுகள் விதிக்கப்பட்டதுடன், இம்முறை எவ்வித கட்டுபாடுகளுமின்றி தேர்த்திருவிழாவை விமர்சையாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழா மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளதுடன், மார்ச் மாதம் 6ஆம் திகதி தேர்த்திருவிழாவுடன் 8ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன, மேலதிக மாவட்ட செயலாளர்களான நிஷாந்த கருணாதிலக்க , முத்துமாரி அம்மன் ஆலய ஆட்சி மன்ற சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago