2025 மே 16, வெள்ளிக்கிழமை

மாத்தளையில் 631 பேர் பாதிப்பு

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 27 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை பிரதேசத்தில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் இன்று (27) காலை வரை 159 குடும்பங்களைச் சேர்ந்த 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாத்த​ளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய  மாத்தளை, உக்குவளை, தம்புளை, கலேவல, இரத்தோட்டை, நாவுல, அம்பகங்கோரல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்மேடு சரிவு, மரம் முறிந்து விழுதல் உள்ளிட்ட பல அனர்த்தங்களால் மாத்தளை மாவட்டத்தில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஆலோசனைகள் மாத்தளை மாவட்ட அதிபர் தேஜானி திலகரத்னவால் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .