2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மாத்தளையில் குரங்குகளுக்கு கருத்தடை

R.Maheshwary   / 2022 மார்ச் 01 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

கடந்த 3 வருடங்களாக மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்துவதற்கு, குரங்குகளுக்கு கருத்தடை சிகிச்சைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கமைப்பு குழுவின் தலைவருமான நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

குரங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கிரிதலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

மாத்தளை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட ஏனைய உற்பத்தி பொருள்களில் 30 சதவீதத்துக்கு அதிகமானவை குரங்குகளால் நாசம் செய்யப்படுவதாகவும் எனவே இவற்றைக் கட்டுப்படுத்த 5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளது என்றார்.

இதில் முதற்கட்டமாக யட்டவத்த, கந்தேகெதர, கிரிகல்பொத்த உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குரங்குகளைப் பிடித்து அவற்றுக்கு கர்ப்பத்தடை சிகிச்சைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம், சுற்றாடல் அமைச்சு என்பன இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X