2025 மே 05, திங்கட்கிழமை

மாத்தளையில் வனவிலங்கு வேட்டை அதிகரிப்பு

Gavitha   / 2020 நவம்பர் 16 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில், மாத்தளை மாவட்ட வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், அதிகாரிகள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், வனவிலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கையில், சில ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவ்வாறு வனவிலங்குகளை வேட்டையாடும் நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதன் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள சிறப்புத்திட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தில் இரவு, பகலாக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் அரியவகை பறவைகள் சிலவற்றை வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X