2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மாமனாருக்கும் மருமகனுக்கும் சண்டை ; மாமா பலி

Freelancer   / 2023 பெப்ரவரி 10 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டனில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் நேற்று (09) இரவு இடம்பெற்ற சண்டையில் மாமனார் உயிரிழந்துள்ளதுடன், மருமகனை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

இந்த மோதலில் மூன்று பிள்ளைகளின் தந்தையான கருபன் காமராஜன் (வயது 62) என்பவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் மருமகன் மாமாவை   தள்ளியதில் மாமனார் வீட்டின் மாடியில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக மருமகன் மாமனாரின் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X