Editorial / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாமாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், மருமகனும் அவருடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ குருகம பிரதேசத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளியான மாரிமுத்து தர்மலிங்கம் (வயது 55) கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் மகளை திருமணம் முடித்த கணவரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மற்றைய நபர் சந்தேக நபரின் தந்தை எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்தில் கைதான 26 வயது இளைஞனிடம் இருந்து பிரிந்து செல்வதற்காக கொலை செய்யப்பட்டவரின் மகள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து கொண்டிருந்த வேளையில், சந்தேக நபர் தனது தந்தை மற்றும் ஒரு குழுவுடன் அவர்களது வீட்டின் முன் வந்து அடாவடித்தனமாக நடத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோனின் பணிப்புரைக்கமைய குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஷேன் செனவிரத்ன
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago