2025 மே 17, சனிக்கிழமை

மாயமான இளைஞனை தேடி வேட்டை

Editorial   / 2022 நவம்பர் 28 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நண்பனின் பிறந்தநாள் நிகழ்வுக்குச் சென்று, நோட்டன் பிரிஜ் எபடின் நீர்வீழ்ச்சியில் நீராடிக்கொண்டிருந்த போது காணாமல்போன இளைஞனை கினிகத்ஹேன பொலிஸார் தேடிவருகின்றனர்.  

பொகவந்தலாவை, லின்ஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் விதுஷான் (17) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார். கினிகத்ஹேனையில் உள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே அவ்விளைஞன் பணியாற்றி வந்துள்ளார்.

அந்த வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஏனைய பணியாளர்களுடன் இன்று (28) காலையில் ​சென்றிருந்த அந்த இளைஞன், 11 மணியளவில் குளித்துக்கொண்டிருந்த போதே, நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்ட தகவல்களை அடுத்தே பிரதேசவாசிகளுடன் இணைந்து பொலிஸார், அவ்விளைஞனை தேடிவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .