2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மாற்றுத்தொழிலை நாடும் ஓட்டோ சாரதிகள்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 23 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டதால்,
தற்போது ஓட்டோ தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக
தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக மாற்று தொழிலுக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை
ஏற்பட்டுள்ளதாக மலையக பகுதியில் ஓட்டோ செலுத்தி வாழ்வாதாரத்தை நடத்தும் ஓட்டோ
சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் இன்று ஆயிரங்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் தங்களுடைய
வாழ்வாதாரமாக ஓட்டோ சாரதிகளாகப் பணிபுரிகின்றனர். இந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் பலமடங்காக உயர்ந்துள்ள நிலையில், தற்போது எரிப்பொருள்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே தமது பொருளாதாரமும் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கும்
இவர்கள், எரிபொருள் விலையேற்றத்துக்கு ஏற்ப ஓட்டோ கட்டணத்தை அறவிட முடியாத நிலை
இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

. மேலதிகமாக கட்டணத்தை அறவிட்டால் சவாரி செய்பவர்கள் வர மறுக்கின்றனர். இதனால்
எங்களுக்கு மாற்று தொழிலொன்றை தேடிச்செல்லவேண்டிய நிலையே உருவாகியிருப்பதாக
ஓட்டோ சாரதிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X