Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா ஸ்ரீதரராவ்
போதைப் பொருளுக்கு அடிமையாகிய இளைஞர்களை அதிலிருந்து மீட்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் பெல்மதுளை மித்துரோ - மித்துரு புனர்வாழ்வளிக்கப்படும நிலையத்தினால் முதல் தடைவையாக ஏற்பாடு செய்யப்பட்ட அக்னி கலாசார நிகழ்வு பெல்மதுளை சில்வரே ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.
நாட்டில் ஜஸ், போதைப்பொருள் மாத்திரை, கொக்கெய்ன் மற்றும் ஏனைய போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களை சிறந்த நிலைக்கு கொண்டுவருவதற்காக குப்பியாவத்த போதானந்த நாஹிமி அவர்களால் 1987ஆம் ஆண்டு மேற்படி
பெல்மதுளை மித்துரோ – மித்துரு புனர்வாழ்வளிக்கப்படும நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
போதைப் பொருளுக்கு அடிமையாகியவர்களை அதிலிருந்து மீட்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெல்மதுளை மற்றும் கம்பா, பிலியந்தலை ஆகிய பிரதேசங்களில் மேற்படி மித்துரோ - மித்துரு புனர்வாழ்வளிக்கப்படும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் போதைப் பொருளுக்கு அடிமையாகிய 400 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் திலங்க தேல பண்டார, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுலா இதிகாவெல மற்றும் வைத்திய அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள் உட்பட பெருந்திரலானோர் கலந்து கொண்டனர். R
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago