Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 மே 29 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
டெம்பஸ்டா மற்றும் வெளிஓயா ஆகிய பகுதிகளில், நேற்று (29) அதிகாலை வீசிய மினிசூறாவளி காரணமாக, ஆறு குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த பொலிஸார், மேற்படி குடியிருப்புகளில் வசித்துவந்த மக்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
வட்டவலை, டெம்பஸ்டோ தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பொன்றின் மீது, மரமொன்று முறிந்து விழுந்ததில், மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.
மேலும் வெளிஓயா கீழ்ப் பிரிவு தோட்டத்தில், லயன் குடியிருப்பொன்றின் கூரைப்பகுதி காற்றினால் அள்ளுண்டுச் சென்றதையடுத்து, மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.
இவ் அனர்த்தத்தினால் உயிராபத்துகள் ஏற்படாத போதிலும், இரண்டு குடியிருப்புகள் கடும் சேதமாகியுள்ளதுடன் ஏனைய குடியிருப்புகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளனவென பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளை திருத்தியமைக்கும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago