2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மின்னல் தாக்கி நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 06 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சாமிமலை -ஓல்ட்டன் தோட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் நால்வர், மின்னல் தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கத்திற்கு இலக்கான நால்வரும் 27 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்   என மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி எச். பண்டார கருத்து தெரிவிக்கையில், தற்போது மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்வதால், தொழிலாளர்கள் அவதானத்துடன் பணிகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X