2025 மே 15, வியாழக்கிழமை

மின்வயரில் கையை வைத்தவர்கள் சிக்கினர்

R.Maheshwary   / 2023 ஜனவரி 23 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பொத்தப்பிட்டிய பிரதேசத்துக்கு இலங்கை மின்சார சபையினால் கொண்டு வரப்பட்ட மின்வயர் சுருளில் இருந்து 520 மீற்றர் மின்சார வயர்களை அறுத்து இரும்பு உருக்கும் நிலையத்துக்கு விற்றதாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பொத்தப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 07 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த மின்சார வயர்களை 1,30,000 ரூபாய்க்கு தவுலாகல பிரதேசத்தில் உள்ள இரும்பு உருக்கும் தொழிற்சாலைக்கு விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அதனைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சிறிய​ லொறியொன்றும்  மின்சார வயரை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட நவீன கத்தரிக்கோல் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 கம்பிகள், மின்சார வயர்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் பேராதனையில் 5400 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் பகலில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதாக கூறி கிராமங்களில் சுற்றித் திரிவதுடன், மின் கம்பிகள், இரும்பு பொருட்கள் உள்ள இடங்களை கண்காணித்துவிட்டு இரவில் வந்து திருடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .