2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மீன் கடையில் மின்னல் தாக்கம்; இருவருக்கு ஆபத்து

Freelancer   / 2022 மார்ச் 25 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை - பெல்வெஹெர பிரதேசத்தில் உள்ள மீன் சந்தை ஒன்றில் மின்னல் தாக்கியதில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் பாதிக்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மழை பெய்த போது, மீன் கடையில் இருந்த பெண்ணும், மழைக்கு ஒதுங்கி நின்ற ஆண் ஒருவருமே இதில் பாதிக்கப்பட்டு தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

28 வயதுடைய இளைஞனும் 38 வயதுடைய பெண்ணும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர்களில் ஒருவர் தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X