2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

முட்டை, கோழி இறைச்சியின் விலைகளும் அதிகரித்தன

R.Maheshwary   / 2022 மார்ச் 28 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

தற்போது மாத்தளை நகரில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 900 ரூபாய் தொடக்கம் 950ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன், முட்டையொன்று 28 ரூபாய் தொடக்கம் 32 ரூபாய் வரை அதிகரித்துள்ளதென நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பல அத்தியாவசிய பொருள்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன், வர்த்தகர்கள் தாம் நினைத்த விலைக்கு பொருள்களை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X