2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முட்டைக்கு கடும் தட்டுப்பாடு

Freelancer   / 2022 நவம்பர் 21 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா 

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையில் முட்டைகளை விற்பனைச் செய்ய முடியாமையால், ஹட்டன் நகரிலுள்ள முட்டை வியாபாரிகள் பலர், முட்டைகளை விற்பனைச் செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால் நகரில் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 

சில கடைகளில் முட்​டையொன்று 55 ரூபாய் முதல் 57 ரூபாய் வரைக்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது. எனினும், சில முட்டைக்கடைகளில் முட்டையொன்று 50 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. எனினும், அவ்வாறான கடைகளில் முட்டை விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். 

எனினும், முட்டையின் மொத்த விலை 52 ரூபாய் முதல் 54 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையினால் முட்டைகளை விற்பனைச் செய்ய முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என முட்டை வர்த்தகத்தில் ஈடுபடு​வோர் தெரிவித்தனர். 

முட்டை வர்த்தகத்தை மட்டுமே செய்யாமல், இதர சில்லறை பொருட்களையும் விற்பனைச் செய்யும் வர்த்தகர்கள், ஏனைய பொருட்களை விற்க வேண்டும் என்பதற்காக, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் முட்டையை விற்பனைச் செய்கின்றனர் என்றும் முட்டை வர்த்தகர்கள் தெரிவித்தனர். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .