R.Maheshwary / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
தலவாக்கலை நகரில் கட்டுபாட்டு விலைக்கு அதிகமாக முட்டையை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவை அதிகாரசபையின் பிரதானி அமில ரத்னாயக்க தெரிவித்தார்.
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய முன்னெக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, வௌ்ளை சிவப்பு நிற முட்டையை 50 ரூபாய்க்கும் வௌ்ளை நிற முட்டையை 48 ரூபாய்க்கும் விற்கின்றமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்த நான்கு வர்த்தகளை இந்த மாதம் 28ஆம் திகதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவை அதிகாரசபையின் பிரதானி அமில ரத்னாயக்க தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்புகள் நுவரெலியா மாவட்டம் முழுவதிலும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago