2025 மே 17, சனிக்கிழமை

முன்னாள் துணைவேந்தரைத் தாக்கிய மாணவர்கள் கைது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனராத்ன மீது தாக்குதல் நடத்திய 6 மாணவர்கள் பேராதனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் 6 பேரும் பொலிஸ் நிலையத்தில் சர​ணடைந்த பின்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், பேராசிரியரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா காணொளிகளை அடிப்படையாக வைத்து 12 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மாணவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .