Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
பிள்ளைகளின் கல்வியில் முதல் படியாக இருக்கும் முன்பள்ளி பாடசாலைகளின் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்புச் செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
பதுளை, கனவரல்ல முன்பள்ளி பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், அத்திபாரம் முறையாக காணப்பட்டாலே முடிவு உறுதியாக இருக்கும். அதுபோல பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய முன்பள்ளி பாடசாலை வளங்களை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றார்.
மலையக மக்கள் முன்னணி தலைவர் ராதாகிருஸ்ணன் எம்.பியின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டுச் சென்றுள்ளதாகவும் விரைவில் எவ்வித குறைபாடுகளுமற்ற முன்பள்ளி பாடசாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், கனவரல்ல தோட்ட நலன்புரி உத்தியோகத்தர், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jan 2026