Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 17 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
" மலையகத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர் என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். அவரை வரவேண்டாமென சொன்னது யார்? மக்களுக்கு சேவை செய்ய முன்வாருங்கள், நாங்களே மாலைபோட்டு வரவேற்பளிக்கின்றோம்." - என்று இ.தொ.காவின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
ஆனால், தேர்தல் காலத்தில் வாக்குக்காக மட்டும் எவரையாவது அழைத்துக்கொண்டு வருகின்றீர்கள், தேர்தல் முடிந்ததும் எங்களையும் கஷ்டத்தில் தள்ளிவிட்டு, காணாமல் போய் விடுகின்றீர்கள் என்றார். .
“சிறுவர்களுக்கான கனவுகள்” என்ற வேலை திட்டத்தின் கீழ் அவர்களின் நலன் கருதி பூண்டுலோயா பேர்லன்ஸ், ஹெரோ பிரிவில், தலவாக்கலை லோகி, , அக்கரகந்தை பெசிபன், இராகலை பிரம்லி, இராகலை தோட்டம் மத்திய பிரிவு, இராகலை லிடஸ்டேல் தோட்டம் ஆகிய பகுதிகளில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
" மலையகத்தில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் சேவைகளை முன்னெடுக்கின்றன, அவற்றுக்கு எவரும் தடை ஏற்படுத்தவில்லை. மலையகத்துக்கு சேவை செய்ய முன்வருபவர்கள் இருந்தால் நாம் நிச்சயம் வரவேற்போம். ஆனால் எமது சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் தேர்தல் காலத்தில் மட்டும் வரும் போலிகளை நம்பமுடியாது. தோட்டப்பகுதிக்கு வந்து பார்த்தால்தான் காங்கிரஸ் முன்னெடுத்த சேவைகள் தெரியும். மக்களுக்கு தேவையான சேவைகளை அன்று முதல் இன்றுவரை காங்கிரஸ் வழங்கி வருகின்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
7 hours ago