Janu / 2024 ஜூலை 22 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிக் ஓயா வைத்தியசாலையிலிருந்து நோர்வூட் ஸ்டோக்ஹோம் தோட்டத்திற்கு பயணித்த நோயாளர் காவு வண்டி ஒன்று (அம்புலன்ஸ்) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் ,ஹட்டன்- பகவந்தலாவ பிரதான வீதியின் நியூவெலிகம பிரதேசத்தில் திங்கட்கிழமை (22) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
டிக் ஓயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய ஸ்டோக்ஹோம் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று நோயாளர்களை ஏற்றிச் சென்ற போதே இவ்வாறு வீதியில் சறுக்கி சென்று விபத்துக்குள்ளாகியது .
விபத்தின் போது வாகனத்தில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
6 minute ago
24 minute ago
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago
26 minute ago
39 minute ago