R.Maheshwary / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
ரம்புக்கனை நகரில் நேற்று (19) மாலை பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 42 வயதான ஒருவர் உயிரிழிந்த நிலையில், காயமடைந்த 13 பொதுமக்களில் மூவர் கேகாலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இச்சம்பவத்தில் காயமடைந்த 14 பொலிஸார் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த ஏனையவர்கள் கேகாலை மற்றும் ரம்புக்கனை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்களின் நலன் விசாரிப்பதற்காக, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, நேற்று இரவு கேகாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago