R.Maheshwary / 2022 மார்ச் 09 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
வரட்சியான காலநிலையினை தொடர்ந்து, மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் என்றுமில்லாவாறு குறைவடைந்துள்ளதுடன், இதனால் மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் நீருக்குள் மூழ்கிக்கிடந்த கட்டடங்கள் வெளியே தெரியத்தொடங்கியுள்ளன.
அத்துடன், பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மவுசாக்கலை நீர்த்தேக்கத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை மலையகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 63.5 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் தற்போது 36.5 சதவீத நீரே சேமிப்பில் உள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் மவுசாகலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 62.5. சதவீதம் குறைவடைந்துள்ளதுடன், காசல்ரி நீர்தேக்கத்தில் 79.7 சதவீதம் குறைவடைந்துள்ளது.
மேலும் கொத்மலை நீர்தேக்கத்தில் இதுவரை குறைவடைந்துள்ளதாகவும் 28.1 சதவீத நீர் சேமிப்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026