2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மொட்டுக்குள் மோதல் ஒருவருக்கு பிணை

R.Maheshwary   / 2022 ஜனவரி 07 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கண்டி மாநகர சபையின் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது, உறுப்பினர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  உறுப்பினர் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபர் நேற்று முன்தினம் (5) கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றில் கண்டி பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், மீண்டும் மே மாதம் 4ஆம் திகதி  நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி, கண்டி- மாநகர சபையில் நடைபெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது, அச்சபையின் ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்த குறித்த உறுப்பினர், சபையில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவரையே தாக்கியுள்ளார்.

இதன்போது தாக்குதலுக்கு உள்ளான உறுப்பினர் கண்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபர் நேற்று முன்தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X