2026 மார்ச் 19, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் பலி

Janu   / 2026 மார்ச் 18 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, கெஹெல்வத்தை பிரதேசத்திலிருந்து தந்தெனிய நோக்கிச் செல்லும் வீதியின் ஹேனக்கந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (17) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த மரம் மற்றும் மண் திட்டில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த நபர் பலத்த காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 ஹொரண இராணுவ முகாமில் பணியாற்றிய 40 வயதுடைய சமீர லக்ருவன் விஜேசிங்க என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் வராபிட்டிய - பொஸ்ஸல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .