Freelancer / 2022 நவம்பர் 29 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பிபில கனுல்வெல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர், சில காலமாக மேற்கொண்டு வந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டை மெதகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நபர் போலி சாவியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை திருடி, மொனராகலை அதிமலே பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் திருத்துமிடம் ஒன்றில் வைத்து, மோட்டார் சைக்கிள் பகுதிகளை கழற்றி, வேறு மோட்டார் சைக்கிள்களுக்கு பொருத்தி பணம் சம்பாதித்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதிமலே பகுதியில் திருட்டு மோட்டார் சைக்கிள்களை பகுதிகளாக கழற்றிய இருவரையும், கனுல்வெல பிரதேச மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்ட நபரையும் மெதகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் பிபில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago