2025 மே 05, திங்கட்கிழமை

மோதலில் மூவர் படுகாயம் 36 பேர் கைது

R.Maheshwary   / 2021 ஜூன் 01 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகந்த- ஹந்தபிமகம தோட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே இடம்பெற்ற மோதலால், மூவர் படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (30) இரவு ஏற்பட்ட இந்த மோதலில் சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு, வான்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள்கள் என்பன கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 36 பேரில் 6 பேர் பெண்கள் என்றும் இச்சம்பவத்தால் பல இலட்சங்கள் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதென்றும் கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.கே.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை,குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக நடத்திச் செல்லப்படும் சூதாட்ட நிலையமொன்று ஒரு தரப்பினர் ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் எதிராகவும் குரல் கொடுத்து கொடுத்து வந்துள்ளதுடன், குறித்த சூதாட்ட நிலையத்தால் அப்பகுதியிலுள்ள சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டுக்கு அதிக வருமானம் கிடைத்து வந்தமையுமே குறித்த மோதலுக்கான காரணங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X