2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மோஹினி எல்லையில் கவனமாக பயணிக்கவும்

Freelancer   / 2022 நவம்பர் 11 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

மஸ்கெலியா- சிவனொளிபாதமலை வீதியில் மோஹினி எல்லைக்கு அண்மையில் பாரிய கற்பாறைகள் புரண்டு வீதியில் விழுந்துள்ளமையால் பயணிகளும், வாகனசாரதிகளும் அவ்விடத்தை கடந்துச் செல்லும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியில் மலைப்பாங்கான இடங்களில் இருந்து பாரிய கற்பாறைகள் புரண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 

இந்நிலையில், சிவனொளிபாதமலை யாத்திரியை ஆரம்பமாவத்துக்கு முன்னர், வீதிகளில் புரண்டிருக்கும் கற்பாறைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன க​லபொட, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

2022-2023 சிவனொளிபாதமலை யாத்திரியை டிசெம்பர் மாதம் 7 ஆம் திகதியன்று
ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .