2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மௌனம் காக்கமாட்டோம் காங்கிரஸை நம்புங்கள்

R.Maheshwary   / 2022 மார்ச் 13 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அரச பங்காளிக்கட்சியாக இருந்தாலும் - எமது மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஒருபோதும் மௌனம் காத்தது கிடையாது. எனவே, காங்கிரஸை நம்புங்கள். அந்த அமைப்பு உங்களை ஒருபோதும் கைவிடாது - என்று இதொகாவின் நிதிச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.  

“பாலின சமத்துவம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின விழா இன்று (13)  காலை கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

" இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பெண்களும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். காங்கிரஸில் பெண்களே அதிகளவு அங்கத்தவர்களாக உள்ளனர். எமது பலம் பெண்கள்தான். அதனால்தான் எல்லா விடயங்களிலும் நாம் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கிவருகின்றோம். சபைகளில் உயர் பதவிகளையும் வழங்கியுள்ளோம் .  

காங்கிரசுக்கு சோதனை வந்த காலக்கட்டங்களில் எல்லாம் நீங்கள் எமக்கு பக்க பலமாக இருந்துள்ளீர்கள். இனியும் இருப்பீர்கள். நாமும் உங்களை கைவிடமாட்டோம்.  

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, விலைவாசி உயர்ந்துள்ளது. இவை பற்றி காங்கிரஸ் கதைப்பதில்லை என சிலர் விமர்சிக்கின்றனர். நாம் அரச பங்காளிகளாக இருந்தாலும், மக்களுக்கு பிரச்சினை என்றால் மௌனம் காக்கமாட்டோம். ஐயா தொண்டமான் காலம் முதல் தற்போதைய தலைவர் ஜீவன் தொண்டமான் காலம்வரை, மக்கள் பக்கமே காங்கிரஸ் நின்றுள்ளது." - என்றார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X