2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாத்திரிகரைப் பாதுகாக்க விசேட திட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி எசல பெரஹெராவைப் பார்வையிட வரும் யாத்திரிகர்களை, டெங்குத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு, விசேட திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதென, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

கண்டி எசல பெரஹெரா காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுற்றாடல் வேலைத்திட்டம் தொடர்பாக, கண்டி மாநகர அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் கலந்துரையாடலின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

“சுற்றாடல் புனிதமானது” என்ற வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதெனத் தெரிவித்த அவர், இந்தத் திட்டம் தொடாபாக, சகலரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கண்டி நகரை அசுத்தப்படுத்துவதற்கு, யாரும் விரும்பமாட்டார்கள் என்றும், எனவே, கண்டி நகரின் புனிதத் தன்மையைப் பேண, சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சிரமதானம் போன்ற பணிகளில் அடிக்கடி ஈடுபடுவதால், மனமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த அவர், கௌதம புத்தரின் புனித தந்தத்தை தரிசித்துச் செல்வதற்காகக் கண்டிக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தமது கடமை என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X