R.Maheshwary / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. தி. பெருமாள்
வார இறுதி நாள்களில் சிவனொளிபாதமலைக்கு அதிகளவான யாத்திரிகள் வருவதுடன், அதிகளவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தருகின்றனர்.
இதற்கமைய, கடந்த 25ஆம் திகதி முதல் சிவனொளிபாதமலையை தரிசிக்க அதிகளவில் யாத்திரிகர்கள் வருகைத் தந்ததால், மலையின் அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்வதற்கு யாத்திரிகர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் வருகைத் தந்த யாத்திரிகள் தாம் வருகைத் தந்த வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல், 6 கிலோமீற்றருக்கு முன்பாகவே நிறுத்தி விட்டு, நடந்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஊசி மலை பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததுடன், இம் முறை பலர் தங்களுடைய குழந்தைகளை தவறவிட்டு தேடி அலைந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026