2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

யுவதி வன்புணர்வு: இளைஞனுக்கு தர்ம அடி

ஆ.ரமேஸ்   / 2017 ஜூன் 17 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட லபுக்கலை கீழ் பிரிவிலுள்ள வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணொருவரை வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனை, ஊர்மக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்து, நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (15) இரவு இடம்பெற்றுள்ளது.

19 வயது மதிக்கத்தக்க பெண்ணே, இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

குறித்த பெண், தனக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, 10ஆம் ஆண்டிலேயே தனது கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு சுகவீனமுற்ற பெண்ணொருவரையே, 30 வயது​ இளைஞர், வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துக்கொண்ட இளைஞனே, இரவில் வீட்டுக்குள் நுழைந்து, இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் ஊர் மக்களுக்குத் தெரியவரவே, இளைஞனை பிடித்து, தர்ம அடி கொடுத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞர்,​ கொழும்பில் வேலை செய்துவிட்டு, சுமார் 30 நாட்களாக, குறித்த பகுதியில் தங்கியிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குறித்த இளைஞனது குடும்பத்தை, ஊரை விட்டே வெளியேறுமாறு கோரி, லபுக்கலை கீழ்பிரிவு தோட்டத தொழிலாளர்கள், நேற்று (16) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .