2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரஜமஹா விகாரையில் ரூ.860,000 பணம் கொள்ளை

Kogilavani   / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை, ரஜமஹா விகாரையின் விஹாராதிபதியின் அறையிலிருந்து சுமார் 860,000 ரூபாய் பணம், வீடியோ கமரா மற்றும் பெறுமதிமிக்க கடிகாரம் என்பன நேற்று பகல்  கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விஹாராதிபதியின் அறைக்கு ஜன்னல் வழியாக நுழைந்தவர்கள் இப்பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .