2025 மே 15, வியாழக்கிழமை

ரதெல்ல விபத்தின் பஸ் சாரதி பிணையில் விடுதலை

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நானுஓயா- ரதெல்ல குறுக்க வீதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணை மூன்றிலும் சாரதி நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா  நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் வேன் ஒன்றில் பயணித்த அறுவரும் ஓட்​டோ​ சாரதி ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .