2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பொடி மெனிக்கே சிக்கிய பெண்

Janu   / 2025 செப்டெம்பர் 28 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் மோதிய ஒரு பெண், அதன் இயந்திரத்திற்குள் சிக்கி இருந்த நிலையில் அருகிலுள்ள கரேஜில் பணிப்புரிந்த தொழிலாளர்களால் மீட்கப்பட்டு டிக் ஓயா அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. 

பொடி மெனிக்கே ரயில் மெதுவாக பயணித்ததாகவும்,குறித்த பெண் நீண்ட நேரம் ரயில் பாதைக்கு அருகில் இருந்ததாகவும் கரேஜ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X