2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் மரணம்

R.Maheshwary   / 2022 மே 17 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நானுஓயா-பெரகும்பர  ரயில் நிலையத்திற்கருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று  (16) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக  நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

ரயிலில் மோதி காயமடைந்த நபர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தப்பளை -பார்க் தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான பெருமாள் ராமேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ரயில் முன் பாய்ந்து தூக்கி வீசியெறியப்பட்டதை அடுத்து, ரயிலை நிறுத்திவிட்டு பார்த்த போது, காயமடைந்திருந்தாக ரயில் சாரதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  குறித்த இளைஞர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்  என இளைஞரின் குடும்பத்தார் நானுஓயா பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X