2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ரயில் பயணத்தை தாமதமாக்கிய சடலம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 22 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

ரயிலில் மோதி உயிரிழந்த நபரின் ஒருவரின் சடலம் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த தாமதமாகியதன் காரணமாக, மலையக ரயில் சேவைகள் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகின.

இன்று (22) காலை பிலிமத்தலாவை ரயில் நிலையத்துக்கு அருகிலே​யே குறித்த சடலம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 6.30 மணியளவில் இந்த நபர் ரயிலில் மோதி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், காலை 9 மணிவரை இச்சடலம் ரயில் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த பேராதனை பொலிஸார், சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

எனினும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .