2025 மே 17, சனிக்கிழமை

ரூ.100 இலட்சம் வரிப்பணம் நிலுவையில் உள்ளது

Freelancer   / 2022 நவம்பர் 30 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன்-டிக்கோயா நகரசபை இதுவரை அறவிடப்பட வேண்டிய வரிப்பணத்தின்  நிலுவை மதிப்பீட்டுக் கட்டணம் 100 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் தவிசாளர் சடையன் பாலசந்திரன்  தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து தெரிவித்த அவர்,
கடந்த கொரோனா காலப்பகுதியில் ஹட்டன்-டிக்கோயா சபைக்குட்பட்ட மக்களுக்கு மதிப்பீட்டு வரி செலுத்துவதற்காக ஓரளவு நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் அதனைப் பயன்படுத்திக் கொண்ட சிலர் நிலுவை மதிப்பீட்டுக் கட்டணத்தை இதுவரை செலுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் 103 இலட்ச ரூபாய் வரிப்பணம் நிலுவையாக உள்ளதென்றும் இவற்றை உரியமுறையில் செலுத்துமாறு பலமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, அறிவிப்பு கிடைத்தும் உரியமுறையில் வரிப்பணத்தை செலுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .