R.Maheshwary / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ்வரி விஜயனந்தன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்திருந்த நிலையில், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (SSPC) ஆகியன தம்மால் 10,000 ரூபாய் மாத்திரமே தீபாவளி முற்பணமாக வழங்க முடியுமென அறிவித்திருந்தன.
இந்த நிலையில் JEDB, SSPC என்பன தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாயை வழங்க இணக்கம் தற்போது தெரிவித்துள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அண்மையில் தனக்கும் குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் இதன்போதே, அவர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்தனர் என்றும் குறிப்பிட்டார்.
JEDBக்குச் சொந்தமான தோட்டங்களில் 10,000 ரூபாய் தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நிதி பிரச்சினை காரணமாக குறித்த தோட்டங்களில் உள்ள கூட்டுறவு நிலையங்கள் ஊடாக மேலதிமாக 5ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
1 hours ago
6 hours ago
7 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
7 hours ago
17 Jan 2026