2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் பல ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

நுவரெலியா பந்தய மைதானத்தின் 84 ஏக்கர் அனுமதியின்றி கையகப்படுத்தப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.குலசூரிய தெரிவித்தார்.

நுவரெலியா ரேஸ்கோர்ஸுக்குச் சொந்தமான எண்பத்து நான்கு ஏக்கர் காணியில், பல இடங்கள் அனுமதியின்றி பல்வேறு தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும், பல அனுமதியற்ற நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (5) இந்த மைதானத்துக்கான கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான நுவரெலியா ரேஸ்கோர்ஸ் பல்வேறு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டு, பல தடவைகள் அனுமதியின்றி நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இவ்வாறான நிர்மாணங்களை அகற்ற வேண்டும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .