2026 ஜனவரி 21, புதன்கிழமை

லயன் குடியிருப்பில் தீ; 3 வீடுகள் சேதம்

Kogilavani   / 2021 மே 23 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்  

நானுஓயா சமர்செட் தோட்டப் பிரிவில், 10 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பில்,  இன்று(23) காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 3 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று, நானுஓயா பொலிஸார் தெரவித்தனர்.

மேற்படித் தோட்டத்தின் இரண்டாம் இலக்க லயன்  குடியிறுப்புப் பகுதியிலேயே  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ் வீடுகளில் வசித்து வந்தவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தோட்ட மக்களின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்விபத்துத் தொடர்பில் நானுஓயா பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X