R.Maheshwary / 2022 நவம்பர் 16 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக கல்வி புலத்திலும் இலக்கியத்திலும் தன்னை அடையாள படுத்திக்கொண்ட லெனின் மதிவாணனின் மறைவு துயரம் தோய்ந்த ஒன்றே என மலையக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
காசல்றீ மண்ணில் பிறப்புக்கொண்ட லெனின் மதிவாணன் அவர்கள் நல்லாசியராய் ஆசிரிய கலாசாலையில் தேர்ந்த விரிவுரையாளராகப் பல நூறு ஆசிரியர்களை தோற்றுவித்ததில் இவரின் பங்கு அளப்பரியது.
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பிரதி ஆணையாளராய் பதவிவகித்த போது தமிழ் மொழி பாடநூல்களில் நவீன இலக்கியத்தையும் மலையக இலக்கியத்தையும் இணைத்த இவரின் திறானியை என்றும் இந்த கல்வி புலம் பேசி நிற்கும்.
தொழிலாளர்களையும் அவர் தம் கனவுகளையும் பேசதுணிந்த இவரின் எழுத்துக்களின் ஆளுமையை காலம் தீட்டும்
லெனின் மதிவாணனின் பிரிவால் துயருறும் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் மலையக ஆசிரியர் ஒன்றியம் துயரைப் பகிர்கிறது என மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago