Janu / 2024 ஏப்ரல் 04 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்து ஓயா பகுதியில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
குருந்து ஓயாவில் இருந்து இராகலை நோக்கி பயணித்த மரக்கறி லொறி எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் ,லொறியில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரஸ்ட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டி.சந்ரு , செ.திவாகரன்

22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago