2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

லொறி கவிழ்ந்ததில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

R.Maheshwary   / 2022 மார்ச் 16 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

டயகம வெஸ்ட் தோட்டத்திற்கு சொந்தமான லொறியொன்று 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு, இன்று அதிகாலை ஒரு மணிக்கு  குறித்த தோட்டத்திற்கு செல்லும்போது,  ஆகுரோவா பிரதேசத்தில் 70 அடி பள்ளத்தில் பாய்ந்து, விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, லொறியின் சாரதி உட்பட மூவர் பலத்த காயங்களுடன் டயகம பிரதேச வைத்தியசாலையசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலைக்கு. மாற்றப்பட்டனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கு காரணமென, ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதுடன்,  விபத்து தொடர்பான விசாரணைகளை டயகம மற்றும் அக்கரப்பத்தனை  பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X