2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீதிகளை முறையாக செப்பனிட கோரிக்கை

Sudharshini   / 2015 நவம்பர் 26 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

வீதி அபிவிருத்திகளை கடந்த அரசாங்கம் முறையாக மேற்கொள்ளாததால் மத்திய மாகாணத்திலுள்ள வீதிகள், மழை காலங்களின்போது சேதமடைகின்றன. இதனால் பல்வேறு அசௌகரியங்களை மக்கள்  எதிர்கொள்வதாகவும் நாவுல பிரசேத சபையின் உறுப்பினர் லைனல் பெரேரா கூறினார்.

கடந்த சில நாட்களாக பெய்த  மழை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள பல வீதிகள் சேதமடைந்துள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் லக்கல, வில்கமுவ, நாவுல, யட்டவத்த, பல்லேபொல உட்பட பல பிரதேச சபைகளுக்குட்பட்ட வீதிகள் பாரியளவில் சேதமாகியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக,  பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகள்  பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் கேட்டபோதே பிரதேச சபை உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

 'கடந்த  அரசாங்கம் வீதி அபிவிருத்திகளை முறையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பாக மத்திய மாகாணத்தில் மலை அடிவாரங்களை அண்டி அமைக்கப்பட்ட பல வீதிகள்  மழை நீரினால்; கழுவிச்  செல்லப்பட்டுள்ளன.  வீதி அபிவிருத்திக்காக போட்டப்பட்ட கிரவல் கற்கள் மட்டுமே தென்படுகின்றன.   வீதி அபிவிருத்திகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இவ்வாறு ஏற்பட்டிருக்காது' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .