2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பெண் பலி: மூவர் படுகாயம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம். ரம்ஸீன்

கம்பளை - பேராதனை வீதி, அங்குனாவலவில் செவ்வாய்க்கிழமை (1) இடம்பெற்ற விபத்தில் மாவனல்லை- ஹிங்குலவைச் சேர்ந்த அஜந்தா ஐரங்கனி (வயது 45) உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவனெல்லையிலிருந்து திருமண வீடொன்றுக்காக நுவரெலியா நோக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளனர்.  இவர்கள் பயணித்த கார், பாதையை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .